பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் விடுத்த செய்தி

சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடாத தனியார் பேருந்துகள் தொடர்பில் எதிர்வரும் வாரமளவில் தீர்மானமொன்றை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக போக்குவரத்து அமைச்சர் காமனி லொகுகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாரியளவில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பேருந்துகளில் சுகாதார ஆலோசனைகளை மீறி பயணிகளை அழைத்துச் செல்கின்றனர்.

இதன் காரணமாக எதிர்வரும் வாரம் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரித்தார்.