யாழில் நடந்த கொரோனா பரிசோதனை…வடக்கு மக்களுக்கு மகிழ்ச்சி தரும் முடிவுகள்..!!

கொரோனோ சந்தேகத்தில் யாழில் 78 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஒருவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் இருந்து 78 பேருக்கான covid – 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில்  மேற்கொள்ளப்பட்டன.பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் – 7 பேர், போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 14 பேர்வவுனியா பொது வைத்தியசாலை – 4 பேர்,யாழ் மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு பார ஊர்திகளில் அடிக்கடி சென்று வந்தவர்கள்(சாரதி மற்றும் உதவியாளர்) – 30 பேர்,வவுனியா மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு பார ஊர்திகளில் அடிக்கடி சென்று வந்தவர்கள் (சாரதி மற்றும் உதவியாளர்) – 10 பேர்,மன்னார் மாவட்டத்திற்கு கொழும்பிலிருந்து கடமையின் நிமித்தம் வந்தவர்கள் – 13 பேர்.
இவ்வாறான நேற்றும் இன்றுமாக இரண்டு நாட்களில் 78 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒருவருக்கும் தொற்று இல்லை என பரிசோததனை அறிக்கை உறுதிப்படுத்தியிருப்பதாக பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.