கிளிநொச்சியில் புளியம்பொக்கணை நகாதம்பிரான் ஆலயத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை!

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் பொங்கல் விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், சுகாதார நடைமுறைகளின்படி 100 இற்கும் குறைவான பக்தர்களின் பங்குபற்றலுடனேயே பொங்கல் விழாவை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்திற்கும், கண்டாவளை பிரதேச செயலாளருக்குமிடையே இன்று நடந்த கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளைய பங்குனி உத்தர பொங்கல் விழாவில் வெளிமாட்டங்களை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பரிசோசிக்கப்பட்டே அனுமதிக்கப்படுவார்கள்.