ஏ-9 வீதியில் கோர விபத்து..கடையை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற வான்.!! பரிதாபமாகப் பலியான பெண்கள்!!

அநுராதபுரம் – திரிப்பனேபகுதியில் நடந்த வாகன விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து திரிப்பனே – A9 வீதியில் இன்று மதியம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 15 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற வான் திடீரென வீதியின் வலது புறத்திற்கு திரும்பி கடை ஒன்றை உடைத்துக்கொண்டு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.விபத்து நடந்த நேரத்தில் வானில் 15 பேர் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.வாகன சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.