ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளையில் மக்கள் நெரிசல் குறைந்து காணப்படும் வட மாகாணம்..!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டம் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இருப்பினம் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிரந்த ஏனைய மாவட்டங்களில் உள்ள மக்கள் குறைந்த அளவிலேயே விற்பனை நிலையங்களுக்கு வருகை தந்துள்ளதாக எமது வவுனியா செய்தியாளர் குறிப்பிட்டார்.