பளையில் கோர விபத்து..தாம் விற்ற டிப்பருடன் மோதி தந்தையும் இரு மகன்களும் பரிதாபமாகப் பலி..!!

பளை, இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தந்தையும், அவரது இரண்டு மகன்களும் உயிரிழந்தனர்.

பளை, தர்மகேணியை சேர்ந்த மணல் வியாபாரியான அழகரத்தினம் சற்குணநாதன் (34) என்பவரே உயிரிழந்தார்.அவரது இரண்டு மகள்கள் உயிரிழந்ததாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த போதும், உயிரிழந்தவர்கள் அவரது மகன்கள் என்பது தெரிய வந்துள்ளது9, 12 வயதுடைய மகன்களே உயிரிழந்தனர்.மணல் வியாபாரியான அவர் காரில் சென்று கொண்டிருந்த போது, டிப்பர் வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானார்.இந்த டிப்பர் இவரது பாவனையில் இருந்த நிலையில், அண்மையிலேயே அவரால் விற்பனை செய்யப்பட்டிருந்தது. அந்த டிப்பரை விற்பனை செய்த பின்னர், கொள்வனவு செய்த காரில் பயணித்த போதே விபத்தில் சிக்கினார்.