மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள யாழ்ப்பாணம்! மக்களே அவதானம்

வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ சேவையாளர்கள் உட்பட 19 பேருக்கு யாழில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பபாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றின் ஆய்வுகூடங்களில் 634 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த பரிசோதனையின்படி தொற்று இனங்காணப்பட்டவர்களில் மருத்துவர்கள் இருவர், தாதிய உத்தியோகத்தர்கள் மூவர், சுகாதார ஊழியர்கள் நால்வர், மருத்துவ பீட மாணவர்கள் இருவர், தாதிய மாணவர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சுத்திகரிப்புப் பணியாளர் ஒருவரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், காரைநகரில் சுயதனிமைப்படுத்தப்பட்ட மூவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பேருந்து சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருநெல்வேலி பொதுச் சந்தையைச் சேர்ந்த மேலும் இரண்டு தொற்றுக்குள்ளானவர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, தெல்லிப்பழை வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாந்தை மேற்கைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய இருவருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.