தற்போது கிடைத்த விசேட செய்தி..யாழ் போதனா வைத்தியசாலையில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைக்குள் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் 19 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.யாழ்.மாவட்டத்தில் 26 பேர் உட்பட வடமாகாணத்தில் 29 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதன்படி 634 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் யாழ்.மாவட்டத்தில் 26 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 2 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான 26 போில் 19 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையை சேர்ந்தவர்கள் என பணிப்பாளர் கூறியுள்ளது. அதன்படி நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பொதுமக்கள், 2 வைத்தியர்கள், 3 தாதியர்கள், 4 சிற்றுாழியர்கள் மற்றும் 2 மருத்துவ மாணவர்கள், தாதிய மாணவர் ஒருவர் மற்றும் சுத்தீகரிப்பு பணியாளர் ஒருவர் உட்பட 19 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.மேலும், யாழ்.சிறைச்சாலை கைதிகள் 2 பேருக்கும், திருநெல்வேலி சந்தையில் மேலும் 2 பேருக்கும், காரைநகரில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மன்னார் வைத்தியசாலையில் நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த இருவருக்குமாக இன்று வடக்கில் 29 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.