மேலும் வீழ்ச்சி அடைந்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்கா டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.


இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில் இவ்விடயம் வெளிவந்துள்ளது.

இதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 201 ரூபாய் 60 காசுகள் ஆகும்.

இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 196 ரூபாய் 72 காசுகளாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.