வாகனக் கதவு திடீரெனத் திறந்தது..நிலத்தில் வீழ்ந்து பரிதாபமாகப் பலியான ஐந்து வயதுச் சிறுவன்!!

பாடசாலை வாகனம் ஒன்றின் கதவு திடீரென திறந்து கொண்டதால், வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 5 வயது பாலர் பாடசாலை மாணவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளான்.வெல்லவாய, எல்ல வீதியின் ஹுனுகெட்டிய பகுதியில் இந்த விபத்து  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாலர் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் 5 வயதான அனுஹஸ் எனும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் வாகனத்தின் ஓட்டுனர் வெல்லவாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.