அனைத்து வடமாகாணப் பாடசாலைகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்..!!

வடக்கு மாகாணத்தில் கோவிட் – 19 தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதன்படி, கோவிட் – 19 தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பாடசாலைகளில் காலை நேர பிரார்த்தனைகளுக்காக மாணவர்களை ஒருங்கிணைத்து நடாத்துவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.மேலும், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி எதிர்வரும் 31.05.2021 வரை வகுப்பறைகளிலேயே காலை நேர பிரார்த்தனைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.