நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு !

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்படி எதிர்வரும் 9ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி மேல் பாமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் தரம் 5, 11 மற்றும் 13 அகிய வகுப்புகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டதையடுத்து மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 29ஆம் திகதி திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.