தற்போது கிடைத்த விசேட செய்தி..யாழ்.நகரில் மிகப் பெரிய கொரோனா கொத்தணி..?? நவீன சந்தை கொத்தணியில் மட்டும் 77 பேருக்கு தொற்று உறுதி?

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று (25) பதிவாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ் நகரிலுள்ள புதிய சந்தையுடன் தொடர்புடைய கொத்தணியில் மட்டும் இன்று 77 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புதிய சந்தைக்குள் தொற்று உறுதியானதை தொடர்ந்து,நேற்று சந்தை மூடப்பட்டு வர்த்தகர்களிடம் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர்கள் உள்ளிட்ட குடும்பங்களிடமும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதில், 77 பேர் இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.இது தவிர, திருமண வீடொன்றுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட இன்னும் சிலரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இன்று மாலையே இது குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியாகும்.

-Pagetamil