கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்..!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம், பிரதேசவாசிகளின் தகவலுக்கமைய இன்று (வியாழக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்நிலையில், உயிரிழந்துள்ள பெண்ணின் விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதுடன் கொலையா, தற்கொலையா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.அத்துடன், மரண விசாரணைகளின் பின்னர், சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு வைத்திய பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.