வடக்கில் கொரோனாவிற்குப் பலியான 82 வயது முதியவர்!! வடக்கில் இதுவரை 11 பேர் மரணம்..!!

வடக்கில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 82 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இது வடக்கின் 11வது மரணமாகும்.வவுனியாவை சேர்ந்த முதியவர் மூச்சுவிட சிரமமான நிலையில் நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இன்று காலை மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.அவர் ஆபத்தான நிலையிலிருந்ததையடுத்து, இன்று நண்பகல் 12 மணியளவில் வவுனியா வைத்தியசாலையிலிருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மதியம் 2 மணியளவில் உயிரிழந்தார்.வடக்கில் கடந்த 4 மாதங்களில் மன்னார் மாவட்டத்தில் 5 பேரும், யாழ் மாவட்டத்தில் 4 பேரும், வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.