யாழில் தீவிரம் பெறும் கொரோனா..யாழ்.மாநகர வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில் வர்த்தகர்கள் சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு யாழ்.வணிகர்கழக தலைவர் ஆ.ஜெயசேகரம் கூறியிருக்கின்றார்.

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, தற்போது யாழ்.மாநகரில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. நேற்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 9 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.அவர்கள் யாழ்.மாநகரில் உள்ள சந்தை வர்த்தகர்களாவர். இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மிகவும் இறுக்கமான முறையில் பின்பற்றவேண்டும்.மேலும், வியாபார நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஸ்தானங்களில் கடமையாற்றுவோர் ஏற்கனவே சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது கட்டாயமாகும்.
யாழ்.குடாநாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுகின்றது. எனவே யாழ்.குடாநாட்டை முடக்க வேண்டிய நிலைகூட ஏற்படலாம்.எனவே, பொதுமக்கள் வர்த்தகர்கள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.