கொரோனா 3ம் அலை..! பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை..

இலங்கையில் தமிழ் – சிங்கள புதுவருடத்திற்கு பின் கொரோனா 3ம் அலை உருவாகும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தற்போது இயல்பாக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகள் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மேலும் இறுக்கமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.

பொருட்களுக்கான விலை தள்ளுபடி மற்றும் விற்பனை நடவடிக்கைகள் என்பன அதிகளவிலான மக்களை வெளியில் செல்ல தூண்டுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை அதிகரித்தமை காரணமாக ஒரு நாளைக்கு செய்யப்படும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளன என்றும் எம்.பாலசூரிய தெரிவித்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவரது நெருங்கிய தொடர்புடைய ஒருவர் பொது இடத்திற்குச் சென்றால், அவர்கள் மூலம் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.