ஆபத்தின் உச்சியில் யாழ்.மாவட்டம் !யாழ் மாவட்டத்தில் 33 பேருக்கு தொற்று

யாழ்.மாவட்டத்தில் 33 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதன்படி யாழ்.திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் மற்றும் சந்தையை சூழவுள்ள வியாபார நிலையங்களில் வேலை பார்ப்போருக்கு நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உடுவில் பகுதியில் ஒருவர், வேலணை பகுதியில் ஒருவர், யாழ்.சிறைச்சாலை கைதிகள் 3 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேர், யாழ்.மாநகரில் ஒருவர் உட்பட யாழ்.மாவட்டத்தில் இன்று மட்டும் 33 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, மல்லாவி பகுதிகளைில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி பளை பிரதேசத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் வவுனியா வைத்தியசாலையில் இருவருக்கு தொற்று உறுதியான நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார்.