வெளிநாட்டு வங்கிகளில் 17 மில்லியன் ரூபாவை கொள்ளையிட்ட வவுனியா இளைஞன்

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் வவுனியா, வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்கி கணக்குகளை ஊடுருவி 17 மில்லியன் ரூபாய் பணத்தை தனது கணக்கிற்கு மாற்றிக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

29 வயதுடைய குறித்த நபர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள தனியார் வங்கியில் இருந்து தனது வங்கிக்கு 17.2 மில்லியன் ரூபாய் பணம் வைப்பில் இடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையிலுள்ள பல வங்கி கணக்குகளுக்கு 140 மில்லியன் ரூபாய் பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளதென சந்தேக நபருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.