வேகமாகச் சூடாகிவரும் பூமி..வெப்பமயமாகுதலை தவிர்க்க பில்கேட்ஸ் கூறும் சூப்பர் ஐடியா.!! சூரியக் கதிர்களை தெறிக்க விட முயற்சி!!

ஒரு வைரஸ் கிருமி ஒன்று உருவாகி உலகை அழிக்க கூடும் என்று, கொரோனா வர முன்னரே பில்-கேட்ஸ் தெரிவித்து இருந்த கருத்து, தற்போது தான் பேசப்பட்டு வருகிறது.

இந் நிலையில்,ஒவ்வொரு ஆண்டும் பூமி வெப்பமடைந்து கொண்டு செல்கிறது. அதன் வேகம் விஞ்ஞானிகள் முன்னர் கூறியதை விட அதிகமாக உள்ளது. இதனால், மில்லியன் கணக்கான வருடம் உறை நிலையில் இருந்த வட துருவம் மற்றும் தென் துருவத்தில் உள்ள பனிப்பாறைகள் கூட கரைய ஆரம்பித்து விட்டது.இந் நிலை நீடித்தால், இமய மலையில் கூட இனி பனி இருக்காது. இதனால் பெரும் அழிவுகள் ஏற்படும் என்று, மைக்கிரோ சாஃப் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். இவர் கூறுவது உண்ம.ஏற்கனவே பல விஞ்ஞானிகள் இது தொடர்பாக தமது கருத்தை தெரிவித்து விட்டார்கள்.இன் நிலையில், பூமிக்கு மேல் ஒரு வகை சுண்ணாம்பை தூவுவதன் மூலம், அந்த துகள்கள் காற்றில் பறக்கும். இவை வெள்ளை நிறம் என்பதனால், சூரியனில் இருந்து பூமிக்கு வரும் சூரிய கதிர்களை அது திருப்பி அனுப்பி தெறிப்படையச் செய்யும்.இதனால், ஒரு அளவுக்கு பூமி வெப்பமாதலை தடுக்க முடியும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.ஆனால், அது பெரும் அழிவில் கொண்டு போய் விடும் என்று சில விஞ்ஞானிகள் அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். இருப்பினும் நீண்ட தொலை நோக்கு பார்வை கொண்ட பில் கேட்ஸ் அவர்கள் பூமி வெப்பமாதல் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து. உலகில் பலரது கவனத்தை ஈந்துள்ளது என்று தான் கூறவேண்டும். விரைவில் விஞ்ஞானிகள் இதற்கு ஒரு முடிவை கட்டவேண்டும். இல்லை என்றால், நாம் வாழ்ந்து அனுபவித்து விட்டுச் சென்று விடுவோம்.ஆனால்,எமது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் இந்த பூமியில் மிகவும் அவதியுறுவார்கள். Skin Cancer என்று சொல்லப்படும் தோல் புற்று நோய் அதிகம் வர வாய்ப்புகள் உள்ளது.