கடந்த 24 மணி நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் படைத்துள்ள சாதனை!!

கடந்த 24 மணிநேரத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 21 விமானங்கள் தரையிறங்கியும் வெளிச் சென்றும் உள்ளதாகவும் 1260 பயணிகள் நாட்டுக்கு வந்தும் நாட்டிலிருந்து வெளிச்சென்றும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 12 விமானங்கள் தரையிறங்கியுள்ளன. இதன்மூலம் 637 பயணிகள் வருகை தந்துள்ளனர்.இதில், 84 பேர் பஹ்ரைனிலிருந்தும் 83 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வருகை தந்துள்ளனர்.இவ்வாறு வருகை தந்த அனைவரும் தனிமைப்படுத்தல் சுற்றுலா ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இதேவேளை 623 பயணிகள் 09 விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிச்சென்றுள்ளனர்.இதில், 169 பேர் சவுதியின் தமாம் நகருக்கும் 103 பேர் டோகா கட்டாருக்கும் சென்றுள்ளனர்.இதனிடையே துருக்கி, பிரேசில், ஈரான் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளிலில் இருந்து 68 உல்லாசப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.