தற்போது கிடைத்த விசேட செய்தி..யாழ் நவீன சந்தைக்குள் கொரோனா..!! நாளை முதல் பூட்டு!!

யாழ் புதிய சந்தை நாளை முதல் மறுஅறிவித்தல் வரை பூட்டப்படுகிறது.

யாழ் நவீன சந்தைக்குள் இன்று மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பிசிஆர் சோதனையில் 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.சந்தைக்குள் பனங்கட்டி விற்பனை செய்யும் 7 பேரும், மரக்கறி விற்பனை செய்யும் 2 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.இன்று அங்கு 80 பேருக்கு பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.எழுமாற்றான சோதனையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, நாளை நவீன சந்தையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.நாளை ஏனையவர்களிற்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படும்.