ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேறுவது உறுதி..!! இந்தியாவின் முடிவினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பேரதிர்ச்சி!!

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கோர்குழு நாடுகள் சமர்ப்பித்த பிரேரணை நிறைவேற்றப்படுமென ஆங்கில ஊடகமொன்று உறுதிபடத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த விவாதம் நேற்று இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.ஜெனீவா நேரப்படி நேற்று (22) காலை 9 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு) வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடாகியிருந்தது.

எனினும், நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட சில குளறுபடிகள், திட்டமிடல் பிரச்சினைகள் காரணமாக, வாக்கெடுப்பை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்க ஜெனீவாவில் உள்ள அதிகாரிகள் தீர்மானித்தனர்.சீனா ,ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளன.ஆனால் ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஜெர்மனி ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கையின் கோர் குழு, பிரேரணை நிறைவேற்றுவதற்கு போதுமான ஆதரவைத் திரட்டியுள்ளதால், தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\வாக்களிப்பின் போது, இந்தியா எடுக்க வேண்டிய நிலைப்பாடு முக்கியமாக இருக்கும், ஆனால் இந்தியா வாக்களிப்பதைத் தவிர்க்க வாய்ப்புள்ளது என்று ஜெனிவா வட்டாரங்கள் தெரிவித்தன.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் இந்த முடிவால் இலங்கைக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நாடுகளுள் ரஷ்யா மற்றும் சீனாவை மாத்திரம் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால், இந்தியா ஐநாவில் நடுநிலை வகிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளதென தெரியவருகிறது.இதன்மூலம் இலங்கைக்கு அறிவுறுத்தல் செய்தி ஒன்றையும் இந்தியா வழங்கியுள்ளது. இலங்கை அதிகமான சீன சார்பு தன்மையை கடைப்பிடித்து வருவதால் இந்தியா சற்று அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.இதேவேளை, ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணையில் வாக்களிக்காமல் விலகியிருப்பது இலங்கை அரசாங்கத்திற்கு பேரதிர்ச்சிக்குரிய தகவல்களாக அமைந்திருப்பதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.