அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது-அமெரிக்காவின் சோதனையில் உறுதி..!!

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி 79 வீதம் செயற்திறன் மிக்கது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகளை சேர்ந்த 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அத்துடன், இரத்த உறைவு குறித்து பாதுகாப்பு பிரச்சினைகள் எதுவும் காணப்படவில்லை எனவும்அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.சமீபத்தில் இரத்த உறைவு ஏற்படுகின்றது என்ற அச்சம் காரணமாக சில ஐரோப்பிய நாடுகள் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்தியது.இதனை அடுத்து ஐரோப்பாவின் மருந்தாக்கல் நிறுவனத்தின் மதிப்பாய்வை தொடர்ந்து தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது எனத் தெரிவித்து சில நாடுகள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன.