சமூக ஊடகப் பயனாளர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள அவசர கோரிக்கை..!!

சமூக ஊடகங்களில் வைரலாகுவதற்காக சுற்றாடல் குறித்துப் பதிவிடாது மெய்யாகவே சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கு சமூக ஊடகப் பயனர்கள் முயற்சிக்க வேண்டுமென சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

கதிர்காமத்தில் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட நதிகளைப் பாதுகாப்போம் நிகழ்வில் பிரதம அதிதியாகப் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,அரசாங்கத்திற்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் சில தரப்பினர் திட்டமிட்ட வகையில் சுற்றுச் சூழல் அழிவு குறித்து சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வருவதனை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.நாட்டில் இடம்பெறும் பாரியளவிலான சுற்றுச் சூழல் அழிவுகளுக்குத் நாம் மட்டுமே பொறுப்பு என்ற வகையில் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.இயற்கை வளங்கள் அழிப்பதற்கோ நதிகளை மாசுபடுத்துவதற்கோ நாம் அனுசரணை வழங்கியதில்லை.நாம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பசுமையான சூழலைக் கடந்த காலங்களில் உருவாக்கியுள்ளோம்.அனைவரும் தங்களது பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட்டால் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது அவ்வளவு கடினமான விடயமன்று என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.