தமது நாட்டு மக்களுக்கு ஒரே நாளில் 711, 156 தடுப்பூசிகளை செலுத்தி முடித்த பிரித்தானியா..!!

பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் மொத்தம் 7 இலட்சத்து 11 ஆயிரத்து 156 பேர் முதலாவது மட்டும் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து முதலாவது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 68 இலட்சத்து 53 ஆயிரத்து 407 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில், சமீபத்திய மைல்கல் ஒரு தனித்துவமான சாதனையை குறிப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மாட் ஹான்கொக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களில் ஒருவரான பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் குறித்த மைல்க்கலை பாராட்டினார்.மேலும் மொத்தம் 21 இலட்சத்து 32 ஆயிரத்து 551 பேர் தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெற்றுள்ளனர் எனவும் அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.