யாழில் வர்ணம் பூசுபவரால் பரவிய கொரோனா!! வடக்கில் இன்று 16 பேருக்குத் தொற்று உறுதி..!!

இன்று வட மாகாணத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் யாழ் மாட்டத்தில் 11 பேரும், மன்னாரில் 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று வடக்கில் 290 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.இதில் யாழ் மாவட்டத்தில் 13 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதில் இரண்டு பேர் வசாவிளான் தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்தவர்கள்.நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர் அடையாளம் காணப்பட்டனர்.இதில் 3 குடும்பங்களை சேர்ந்த 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.பளையை சேர்ந்த ஒருவர் இந்த வீடுகளிற்கு வர்ணம் பூச வந்து சென்றிருந்தார். அவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில், இவர்களிற்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.இ.போ.சவின் கோண்டாவில் சாலை, சாரதிப்பயிற்சி பாடசாலையை சேர்ந்த ஒருவரும் தொற்றிற்குள்ளாகியுள்ளார்.ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றிற்குள்ளாகியுள்ளார். அவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.மன்னார் மாவட்டத்தில் 3 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். அவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.