80 இலட்சம் ரூபா பணத்துடன் முச்சக்கர வண்டியில் வந்த பெண் பொலிஸாரால் கைது..!!

பெல்மடுல்ல பகுதியில் சுமார் 80 இலட்சம் பணத்தை கொண்டு சென்ற பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் அதிகளவு பணத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் ஓபநாயக்க பகுதியில் வசிக்கும் 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பணம் எப்படி வந்தது, காரணம் என்ன என்பதை குறித்த பெண் வெளியிடவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.இவர் 80 இலட்சத்து 31ஆயிரம் பணத்துடன் பயணம் செய்ததாகவும், இந்த பணம் எவ்வாறு கிடைத்தது என்பதை அவர் கூறவில்லை என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இந்தப் பணம் குற்றத்திலிருந்து சம்பாதிக்கப்பட்டதா அல்லது போதைப்பொருள் கடத்தலால் சம்பாதித்த பணமா அல்லது வேறு தரப்பினரால் அவருக்கு வழங்கப்பட்ட பணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.