வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருவோருக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..!! வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு..!!

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் பயணிகள், நாட்டிற்கு வந்து பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் சோதனை முடிவைப் பெற்று வீடுகளுக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், தடுப்பூசி போடாத பயணிகளை ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.