கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கும் இலங்கை மக்களுக்கு நல்ல செய்தி.. விரைவில் வருகிறது சினோபார்ம் தடுப்பூசி..!!

இலங்கையில் COVID-19 க்கு எதிராக அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, முதல் கட்டத்தின் கீழ் சீனாவிலிருந்து 600,000 தடுப்பூசிகளை இலங்கை நன்கொடையாக பெறவுள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதர் பாலித கோஹோன, தடுப்பூசிகள் இலங்கைக்கு உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.