உலகம் முழுவதிலும் ஒரே நேரத்தில் திடீரெனச் செயலிழந்த சமூக வலைத்தளங்கள்..!! குழம்பித் தவித்த பாவனையாளர்கள்..

உலகம் முழுவதும் பேஸ்புக், வட்ஸ்அப், மெசென்ஜர் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் செயலழிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.உலகம் முழுவதும் பயனாளர்களுக்கு ஏற்பட்ட சிரமம் தொடர்பில் டுவிட்டர் கணக்கு ஊடாக பேஸ்புக் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

வட்ஸ்அப், மெசென்ஜர் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றது.இந்த சமூக வலைத்தளங்கள் ஒரு மணித்தியாலங்கள் வரை செயலிழந்து காணப்பட்டுள்ளது.எனினும், தற்போது இந்தச் செயலிகளின் செயற்பாடு வழமைக்கு திரும்பியுள்ளது.இந்த சமூக வலைத்தளங்களின் பிரதான கட்டமைப்பு உலகம் முழுவதும் முழுமையாகச் செயலிழந்த முதல் சந்தர்ப்பம் இதுவெனக் குறிப்பிடப்படுகின்றது.