முன் அறிவிப்பின்றி நாடுமுழுவதும் களமிறங்கப் போகும் இராணுவம் – அமைச்சர் சரத் வீரசேகர

நாட்டில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொலிஸாரின் தலைமையில் இராணுவத்தினரால் விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்பான திகதி அறிவிக்கப்பட்டால் குற்றவாளிகள் தலைமறைவாக வாய்ப்பாகிவிடும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பகல் மற்றும் இரவு வேளைகளில் குறித்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.