கொரோனாவிற்கு இலக்கான 208 கடற்படை வீரர்கள்…4000 பேர் தனிமைப்படுத்தி வைப்பு..!!

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களில் 208 கடற்படையினர் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.தற்போது வரையில் 588 கொரோனா நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 277 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 208 கடற்படை வீரர்களும் அடங்குகின்றனர். நோய்த் தாக்கத்திற்கு உட்பட்ட கடற்படை வீரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் 4000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.437 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என ஐ.டீ.எச் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.