தன்னிடம் டியூஷன் பயின்ற 13 வயது மாணவனை திருமணம் செய்த ஆசிரியை..!!

பஞ்சாபில் தன்னிடம் டியூஷன் பயின்ற 13 வயது மாணவனை ஆசிரியை திருமணம் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.ஜலந்தர் மாவட்டத்தின் பாஸ்தி பாவா கேல் என்ற பகுதியில்,பெண் ஒருவர் பள்ளி மாணவர்களுக்காக டியூஷன் வகுப்புகளை நடத்தி வருகிறார். இவருக்கு, செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணமாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், கவலையில் இருந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர், ஜோதிடர் ஒருவரின் உதவியை நாடினர்.அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகவேண்டும் என்றால், பரிகாரமாக, ஒரு சிறுவனுடன், அந்த பெண்ணுக்கு சம்பிரதாயமாக திருமணம் செய்து வைக்க வேண்டும்’ என அவர் கூறினார்.இதையடுத்து, தன்னிடம் டியூஷன் படிக்கும் 13 வயதான ஒரு மாணவனை திருமணம் முடிப்பதற்காக அந்த பெண், தேர்வு செய்துள்ளார்.

அதிக பாடங்கள் நிலுவையில் இருப்பதால், அந்த சிறுவன் ஒரு வாரத்திற்கு ஆசிரியையின் வீட்டிலேயே தங்கி படிக்கவேண்டும் என அந்த சிறுவனின் பெற்றோரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.வீடு திரும்பிய அந்த சிறுவன், நடந்த அனைத்தையும் தன் பெற்றோரிடம் கூறவே, இந்த விவகாரம் போலீசாரிடம் சென்றது.இது தொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டது. எனினும், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அந்த ஆசிரியை, சிறுவனின் பெற்றோரை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து அந்த புகார் திரும்பப்பெறப்பட்டது.எனினும், பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.