விடுதலைப் புலிகள் தொடர்பில் செய்தி வெளியிட்ட தமிழ் பத்திரிகைக்கு எதிரான வழக்கு..சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனின் வலிதான வாதத்தினால் வழக்கிலிருந்து விடுதலை..!! (காணொளி இணைப்பு)

கடந்த நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தில் புகைப்படத்துடன் செய்தி ஒன்றினை பிரசுரித்தமைக்கு எதிராக யாழிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஒன்றின் நிர்வாக இயக்குனர் மற்றும் செய்தி ஆசிரியர் ஆகியோர் சந்தேக நபர் என பெயர் குறிப்பிடப்பட்டதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தில் புகைப்படத்துடன் செய்தி ஒன்றினை பிரசுரித்தமைக்கு எதிராக யாழிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஒன்றின் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் சார்பில் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா இரு பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்து 45 நிமிடங்களிற்கு மேல் தனது வாதத்தினை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

மேலும், வழக்குத் தாக்கல் செய்த (முறைப்பாட்டாளர்) யாழ்.மாவட்ட பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ நீதிமன்றத்திற்கு வரவில்லை. நீதிமன்றத்தை மதித்து அவர் வருகை தந்திருக்க வேண்டும், பயந்து ஓட ஒழிந்துள்ளார் என அவர் மன்றில் தெரிவித்திருந்தார்.இவ்விடயம் தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,