நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!! 283 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீட்டுக்கு!!

நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 329ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றுக்கு சிகிச்சைபெற்றுவந்த மேலும் 283 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.இதன்படி, கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 86 ஆயிரத்து 227ஆகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், இன்னும் இரண்டாயிரத்து 564 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.மேலும், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை, 538 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.