ஆசிய நாட்டவர்களைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு!! ஆறு பேர் பரிதாபமாகப் பலி..!!

அமெரிக்காவில் 3 ஆசிய ஸ்பாக்களில் நடத்தப்பட்ட துப்பக்கிச்சூட்டில் 6 ஆசிய பெண்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


நேற்றுசெவ்வாய்க்கிழமை ஜோர்ஜியா மாநிலத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. மூன்று ஸ்பாக்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் 6 பேர் ஆசிய பெண்கள் ஆவார்கள்.சந்தேகத்திற்குரிய 21 வயது வாலிபர் ஒருவரை பொலிசார் கைது செய்து உள்ளனர்.ஜோர்ஜியாவின் தலைநகர் அட்லாண்டாவின் புறநகர்ப் பகுதியான அக்வொர்த் அருகே யங்ஸ் ஆசிய மசாஜ் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பெண்கள் கொல்லப்பட்டனர்.அட்லாண்டாவில் உள்ள பீட்மாண்ட் வீதியில் உள்ள கோல்ட் மசாஜ் ஸ்பாவில் மூன்று பேர் சுட்டு கொல்லப்பட்ள்ளனர். அதுபோல் அரோமா தெரபி ஸ்பாவில் ஒருவர் சுட்டுகொல்லப்பட்டு உள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய உட்ஸ்டாக் பகுதியைச் சேர்ந்த ரொபர்ட் ஆரோன் லாங் (21) கிறிஸ்ப் கவுண்டியில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.துப்பாக்கிச்சூடுக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.