கொரோனாவிற்கு எதிரான தமது சிறப்பான திட்டங்களினால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நியூஸிலாந்து..!!

சிறந்த பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கையால் கொரோனா பரவலை தடுத்துவரும் நியூஸிலாந்து இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஆம்! உலக நாடுகளே கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கையில், தளர்த்தப்பட்ட முடக்கநிலையின் முதற்கட்டமாக, நியூஸிலாந்தில் 4 லட்சம் பேர் இன்று பணிக்கு திரும்பியுள்ளனர்.அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா அச்சுறுத்தால், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் பலருக்கும் இது ஆச்சரியமான செய்தியாக அமைந்துள்ளது.கடந்த 5 வாரங்கள் கடுமையான 4 ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு நேற்று நியூஸிலாந்து சில தளர்வுகளை அறிவித்தது.இதற்கமைய இன்று முதல் நியூசிலாந்தில் சில பாடசாலைகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் ஆகியவையும் திறக்கப்பட்டுள்ளன.மேலும், உணவகங்களில் இருந்து மக்கள் உணவை வாங்கி வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை இதுவரை நியூஸிலாந்தில் கொரோனாவுக்கு 1472பேர் பாதிக்கப்பட்டிருந்ததுடன் 1,212பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 19பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், உணவகங்களில் இருந்து மக்கள் உணவை வாங்கி வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை இதுவரை நியூஸிலாந்தில் கொரோனாவுக்கு 1472பேர் பாதிக்கப்பட்டிருந்ததுடன் 1,212பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் , 19பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.