இலங்கையில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!!

நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.நேற்றுமுந்தினம் (புதன்கிழமை) மாத்திரம் 9 ஆயிரத்து 657 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி முதல் நேற்று முந்தினம் வரையான காலப்பகுதியில் நாட்டில் 8 இலட்சத்து 6ஆயிரத்து 449 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை, கொரோனா அபாயப்பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.