பேரூந்திற்குள் திடீரென உயிரிழந்த பயணி.!! வடக்கின் முக்கிய நகரில் பரபரப்பு..!!

மன்னாரில் இ.போ. ச பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று காலை பயணிகளுடன் பயணித்த பேருந்தில் இருந்த முதியவரே இவ்வாரு உயிரிழந்துள்ளார்.

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்று இன்று காலை 5.30 மணியளவில் பயணிகளுடன் கண்டி நோக்கி பயணித்துள்ளது.இதன் போது குறித்த வயோதிபரும் பேருந்தில் பயணித்துள்ளார்.குறித்த பேருந்து மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.இதன் போதே குறித்த வயோதிபர் பேருந்தின் இருக்கையில் திடீர் சுகயீனம் காணரணமாக உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளார்.இதனையடுத்து உடனடியாக இவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.எனினும், உயிரிழந்த வயோதிபர் இது வரை அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகின்ற நிலையில், மேலதிக விசாரனைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.