கொரோனா பரவல் அபாயம் காரணமாக வேலையை இழந்த தனியார்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

இலங்கையில் கொவிட் -19 பரவல் அபாயம் காரணமாக வேலையை இழந்த தனியார்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அரசு அறிவித்திருக்கின்றது.

வேலை இழந்த தனியார் துறை ஊழியர்களுக்கு அரச சலுகை வழங்குவது தொடர்பிலான கணக்கெடுப்பை நடத்துவதற்காக, தொழில் திணைக்களத்தில் தத்தமது விபரங்களை சமர்ப்பிக்குமாறு வேலை இழந்தோருக்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய பாதிக்கப்பட்டவர்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பணியாற்றிய நிறுவனம்,

பணியில் இருந்து நீக்கப்பட்ட திகதி, பணியாற்றிய காலம், இறுதியாக பெற்ற சம்பளம் உள்ளிட்ட விபரங்களை உள்ளடக்கி, தொழில் ஆணையாளர், 11வது மாடி, கொழும்பு 15 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி குறிப்பிட்டுள்ளார். குறித்த விபரங்களை எதிர்வரும் 01ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும்

அவர் கோரிக்கை விடுத்துள்ளார். irlabur456@gmail.com என்ற மெயிலின் ஊடாக தகவலளிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், இதுதொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0112368502 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.