சோற்றுக்கே வழி இல்லை..இரு வருடங்களாக இரவு உணவின்றித் தவித்து.. இந்திய தேசத்திற்காக சாதித்த கிரிக்கெட் நட்சத்திரம்!!

கிரிக்கெட்டில் சாதிப்பதற்காக கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக இஷான் கிஷான் இரவு உணவின்றி உறங்கியுள்ளதாக அவரின் தந்தை உருக்கமாக தெரிவித்துள்ளார்.


இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.இதில் அறிமுக வீரர் இஷான் கிஷானின் ஆட்டம் இந்தியாவுக்கு உதவியாக இருந்தது.இந்நிலையில், இஷான் கிஷான் கிரிக்கெட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் 2 ஆண்டுகள் இரவு உணவின்றி கஷ்டப்பட்டுள்ளார் என அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிய இஷான் கிஷான், இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20ல் இந்திய அணிக்காக ஆடி கனவை நிஜமாக்கினார். 165 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.மறுமுனையில் தன்னம்பிக்கையுடன் இருந்த அறிமுக வீரர் இஷான் கிஷான் அதிரடி ஆட்டத்தால் அரைசதம் கடந்து அசத்தினார்.இதற்காக பலரும் பாராட்டி வருகின்றனர். இந்திய அணியில் சேரும் கனவை நிஜமாக்கியுள்ள இஷான் கிஷான் தனது 12வது வயதில் steel authority of india அணிக்காக ஆடும் வாய்ப்பை பெற்றார்.ஆனால், அவர் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்க பாட்னாவில் இருந்து ராஞ்சிக்கு சென்று தங்க வேண்டியிருந்தது.ஆனால், அவர்களின் பெற்றோரும் தயக்கமின்றி அனுப்பி வைத்துள்ளனர்.இதுகுறித்து பேசிய அவரின் தந்தை, இஷான் சிறுவனாக இருந்த அந்த நேரத்தில் அவன் சிறப்பாக கிரிக்கெட் ஆடுவதாகவும், அவர் இன்னும் நன்றாக ஆடவேண்டும் என்றால் ராஞ்சி செல்ல வேண்டும் எனக்கூறினர்.அவரின் தாய்தான் மிகுந்த சோகத்தில் இருந்தார்.எங்களுக்கு சிறிது பயம் இருந்தாலும், 12 வயதில் அவரை ராஞ்சிக்கு அனுப்பி வைத்தோம்.இஷான் அங்கு 4 சீனியர்களுடன் தங்கியிருந்தார்.அங்கு அவர்களின் பாத்திரங்களை சுத்தம் செய்வது, நீர் பிடிப்பது போன்ற பணிகளை இஷான் செய்தார்.இஷான் 2 ஆண்டுகளாக இரவு உணவின்றி உறங்கியுள்ளார். ஏதேனும் சிப்ஸ் மற்றும் ஜூஸை குடித்துவிட்டு உறங்குவார்.ஆனால் எங்களிடம் உண்டுவிட்டதாக பொய் கூறுவார்.இது எங்களுக்கு பின்னர்தான் தெரியவந்தது.இவ்வாறு இஷான் தந்தை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.இலக்கை அடைவதற்காக எத்தகைய துன்பம் வந்தாலும்,அத்தடைகளை படிக்கற்களாக மாற்றி முன்னேறுபவர்கள் தான் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள். அதற்கு இஷான் கிஷான் ஒரு சிறந்த உதாரணம்.