பிணைமுறி மோசடி வழக்கு..ரவி கருணநாயக்க உட்பட 8 பேருக்கு விளக்கமறியல்..!!

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட எண்மரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதின்றம் இன்று (17) உத்தரவிட்டது.

பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கிலேயே இவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.2019 மார்ச் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்ட மா அதிபரின் வேண்டுகோளுக்கு அமைய கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பான விசாரணைக்கு தலா மூவரடங்கிய இரு நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டன.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் மற்றும் மேலும் 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைகளுக்காக இந்த குழாம் நியமிக்கப்பட்டது.இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, கொழும்பு மேல் நீதின்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.