பொதுமக்கள் Covid 19 தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள உத்தியோகபூர்வ இணையத்தளம்..!!

மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை வழங்குவதற்காக இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) முக்கிய அரசு நிறுவனங்களுடன் இணைந்து http://www.covid19.gov.lk. என்ற இணையத்தளத்தை வடிவமைத்துள்ளது.இந்த தளத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான கொரோனா வைரஸ் தொடர்பிலான துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.