பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு அதிரடியாகக் கைது..!!

பௌத்த பிக்குவொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், விகாராதிபதியொருவர் நீர்கொழும்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு தளுபத்த சிறைச்சாலை வீதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் புதிதாக இணைந்த பிக்குவொருவரே, ஒரு வருடத்திற்கு முன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.இதையடுத்து விகாராதிபதி நீர்கொழும்பு பொலிஸாரால் கைதுசெய்யபட்டுள்ளார்.கைது செய்யப்பட்டபோது, விகாராதிபதி மேலும் இருவருடன் மது அருந்திய நிலையில் இருந்துள்ளார்.