தீவிரமடையும் கொரோனா பரவல்..நாட்டை முழுமையாக முடக்குவது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு..!!

நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதென பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாட்டை முழுமையாக மூடுவதற்கு பலதரப்பாலும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இது குறித்துக் கருத்து தெரிவிக்கும் போதே பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண இதனைத் தெரிவித்துள்ளார்.சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறானதொரு நிலையில், மீண்டும் நாட்டை முடக்குவது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆகவே, பொதுமக்கள் இந்தப் பண்டிகை காலப்பகுதியில் உரிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக செயற்ப்பட வேண்டியது கட்டாயமானதெனவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண மேலும் தெரிவித்துள்ளார்.