யாழில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் பிணையில் விடுதலை..!!

யாழ். மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த மாதம் 20 ஆம் திகதியில் இருந்து இன்றைய நாள் வரை யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவில் 344 பேர் கைது செய்யப்பட்டு காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 40 மேட்டார் சைக்கிள்களும், 1 துவிச்சக்கர வண்டியும் மற்றும் 14 வேறு வாகனங்களும் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு 14 நாட்களின் பின்னர் குறித்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அத்தோடு குறித்த காலப்பகுதியில் 12 திருட்டு சம்பவம் மற்றும் குற்றச்செயல்கள் யாழ். காவல்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இவற்றுள் 11 திருட்டு சம்பவம் மற்றும் குற்றச்செயல்கள் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.குறித்த சம்பவத்தில் 33 லட்சம் பெறுமதியான திருட்டுப்போன இலத்திரனியல் பொருட்கள் மற்றும் வீட்டு பாவனை பொருட்களும் மீட்கப்பட்டு, குற்றவாளிகள் யாழ்ப்பாணம் நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.