வடக்கின் தமிழர் பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் குறிவைக்கப்படும் மற்றுமொரு சிவன் ஆலயம்..!!

கிளிநொச்சியில் அமைந்துள்ள உருத்திர புரீச்சகம் சிவனாலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுக்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

அதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வாராச்சி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த கோவில் வளாகம் இன்று (செவ்வாய்க்கிழமை) துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த கோவில் அமைந்தள்ள வளாகத்தில் பௌத்த சின்னங்கள் காணப்படுவதாக ஏற்கனவே தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், குருத்தூர் மலை விவகாரத்தின் பின்னர் குறித்த பகுதிக்கு பௌத்த துறவி ஒருவரும், பொலிஸாரும் சென்று பார்வையிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.இந்தநிலையில், குறித்த பகுதியில் எதிர்வரும் 23ம் திகதி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.