யாழ்.பருத்தித்துறையில் 9 வயது மாணவிக்கு கொரோனா தொற்று..!!

பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவி ஒருவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அத்தோடு மன்னாரில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.குறித்த பெண் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.இதேவேளை,யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு சுயதனிமைப் படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.