சமுர்த்தி பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி !

சமுர்த்தி பயனாளி குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட இளம்பெண் தொழில் முயற்சியாளர்களுக்காக வீடு மற்றும் வியாபார நிலையத்தை அமைத்துக் கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


இதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 25,000 இளம்பெண் தொழில் முயற்சியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

உணவு விநியோக வலையமைப்பை விஸ்தரிக்கும் நோக்கில் அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பெருந்தெருக்கள் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.